நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் கேரளாவிலும் இன்று (8.1.2020) வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஒட்டி ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழகத்திலேயே மிகப்பெரிய மொத்த வியாபார சந்தையாக விளங்கி வருகிறது.
இந்த சந்தைக்கு திண்டுக்கல், திருப்பூா், ஈரோடு, தேனி, மதுரை, கரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.அதே போல இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கா்நாடாகா, ஒரிசா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கேரளா மக்களின் 60 சதவீத காய்கறி தேவைகளை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது.இந்த நிலையில் கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்று (8.1.2020) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பபடவில்லை.கேரளா மற்றும் தமிழக வியாபாரிகள்,விவசாயிகள் காய்கறி சந்தைக்கு வராததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.