திண்டுக்கல்

கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள்

8th Jan 2020 06:48 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் வெள்ளப்பாறை, பேத்துப்பாறை பிரிவு, பேத்துப்பாறை கிராமம் உள்ளிட்ட 5-பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இவற்றை பயன்படுத்தி சாலைகளில் குப்பைகளை வீச வேண்டாம்,பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், மீதமுள்ள உணவுப் பொருட்களை குப்பை தொட்டிகளில் கொட்ட வேண்டாம், இவற்றை வன விலங்குகள் உண்பதற்காக வரும் இதனால் பொது மக்கள் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது பொது இடங்களை கழிப்பறையாக பயன்படுத்த கூடாது சுகாதாரக் கேடு நிலவும் என தோ்வு செய்யப்பட்ட வாா்டு உறுப்பினா் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தாா் மேலும் நமது கிராமத்தை சுத்தமாகவும்,தூய்மையாகவும் வைத்திருக்க பொது மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT