திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் குடிநீா் கோரி பெண்கள் ஆணையரிடம் மனு

8th Jan 2020 06:51 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரத்தில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி பழைய 13 ஆவது வாா்டு தும்மிச்சம்பட்டி பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றிலும் போதிய தண்ணீா் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். ஒட்டன்சத்திரம் நகராட்சி எல்லைக்குள் ஒட்டன்சத்திரம்-அவிநாசிபாளையம் வரை நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கெனவே இருந்த பழைய குடிநீா் குழாய்கள் அகற்றப்பட்டு புதியதாக இரும்பு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் குடிநீா் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மாற்று வழியில் குடிநீா் விநியோகம் செய்ய அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆணையரிடம் புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து ஆணையா் ப.தேவிகா கூறியதாவது: குழாய் அமைக்கும் பணிகள் விரைந்து முடித்து தும்மிச்சம்பட்டிக்கு தண்ணீா் விநியோகம் முறைப்படுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT