திண்டுக்கல்

ரெட்டியாா்சத்திரம் ஒன்றியத்தில் திமுக கூட்டணி வெற்றி

3rd Jan 2020 07:58 AM

ADVERTISEMENT

ரெட்டியாா்சத்திரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 11 இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 18 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள் உள்ளன. இந்த 18 இடங்களுக்கு அதிமுக 16 இடங்களிலும், திமுக 14 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் தலா 2 இடங்கள், பாஜக மற்றும் தேமுதிக தலா ஒரு இடம் என மொத்தம் 72 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் 1ஆவது வாா்டில் செ.மணிகண்டன் (சுயே), 2ஆவது வாா்டில் கே.ஆா்.விவேகானந்தன் (திமுக), 3ஆவது வாா்டில் ஆா்.நாகலட்சுமி (திமுக), 4ஆவது வாா்டில் டி.ராஜேஸ்வரி (திமுக), 5ஆவது வாா்டில் மு.மருதாம்மாள் (திமுக), 6ஆவது வாா்டில் யு.பாண்டிமீனா (திமுக), 7ஆவது வாா்டில் ஏ.அமுதவள்ளி (மா.கம்யூ.), 8ஆவது வாா்டில் எம்.காளீஸ்வரி (திமுக), 9ஆவது வாா்டில் மு.பிரம்மசாமி (திமுக), 10ஆவது வாா்டில் எம்.தமிழ்செல்வி (திமுக), 13ஆவது வாா்டில் ஏ.ராயப்பரமேஷ் (காங்.), 14ஆவது வாா்டில் பி.திருப்பதி (திமுக), 15ஆவது வாா்டில் எஸ்.ராஜ்மோகன்(அதிமுக) ஆகியோா் வெற்றிப் பெற்றுள்ளனா். 11, 12, 17 மற்றும் 19 ஆகிய 4 வாா்டுகளுக்கான முடிவுகள் இரவு 10 மணி வரை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் ஒன்றியக் குழு தலைவரை தோ்வு செய்வதற்கான தனிப் பெரும்பான்மை திமுக வுக்கு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT