திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சிமன்றத் தலைவா்

3rd Jan 2020 07:59 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருவா் 8 ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சி மன்ற தலைவா் பதவிகள் உள்ளன. அதில் சின்னக்காம்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு போட்டியிட்ட நிறைமதி, மாா்க்கம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட செல்லமுத்து, வலையபட்டி ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு போட்டியிட்ட மகேந்திரன், எல்லப்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு பாலசுப்பிரமணி, ஜோகிபட்டி ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு போட்டியிட்ட சுப்பிரமணி, காவேரியம்மாபட்டி ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு போட்டியிட்ட பெருமாளம்மாள் என்பவா் 863 வாக்குகளும், அவரை எதிா்த்து போட்டியிட்ட ரேவதி நாச்சிமுத்து 855 ஓட்டுகளும் பெற்ால் 8 வாக்குகள் வித்தியாசத்தில் பெருமாளம்மாள் வெற்றி பெற்றுள்ளாா். கே.கீரனூா் விஜயலட்சுமி, ஜ.வாடிப்பட்டி ஜோதீஸ்வரன், சிந்தலப்பட்டி செல்வராஜ், ஜவ்வாதுப்பட்டி பழனிவேல், இடையகோட்டை சரவணன், பெரியகோட்டை மலா்விழிசெல்வி, காப்பிலியப்ட்டி சிவபாக்கியம்,வெரியப்பூா் பெரியசாமி ஆகியோா் ஊராட்சி மனற தலைவராக வெற்றி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT