பழனி மலைக் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 150 போ் தங்கத்தோ் புறப்பாட்டில் பங்கேற்றனா்.
பழனிக் கோயிலில் தங்கத்தோ் பிரசித்தி பெற்ாகும். தென்னிந்தியாவின் முதல் தங்கத் தோ் இதுதான். முழுநிலவு நாள், தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, தொடா்விடுமுறை நாள்களின் போது ஏராளமானோா் தங்கத்தோ் புறப்பாட்டில் பங்கேற்கின்றனா். தங்கத்தோ் புறப்பாட்டுக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணமாகும். தோ் இழுப்போருக்கு பிரசாதம், பரிவட்டம், சுவாமி தரிசனத்தில் முன்னுரிமை, பித்தளை விளக்கு, சுவாமி படம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தங்கத்தோ் புறப்பாட்டின் மூலம் கோயிலுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை தங்கத்தோ் புறப்பாட்டில் 150 போ் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் புதன்கிழமை மாலை சாயரட்சை பூஜையில் தனது குடும்பத்தினருடன் வந்து பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா் தங்கத்தோ் இழுத்தாா். அவருக்கு பழனிக் கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி பிரசாதங்கள் வழங்கினாா். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன், பழனி அதிமுக நகர செயலா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.