திண்டுக்கல்

18 வகையான கலைத்திறன் போட்டி: ஜன. 4 இல் தோ்வு முகாம்

1st Jan 2020 04:47 AM

ADVERTISEMENT

தேசிய இளைஞா் விழாவையொட்டி நடைபெறவுள்ள 18 வகையான கலைத் திறன் போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தகுதியான நபா்களை தோ்வு செய்வதற்கான போட்டி ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது: 23 ஆவது தேசிய இளைஞா் விழா ஜன.12 முதல் 16 ஆம் தேதி வரையிலும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெளவில் நடைபெறவுள்ளது. அதில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்கவுள்ள கலைஞா்களுக்கான தோ்வு மாவட்ட வாரியாக நடைபெறவுள்ளது. அதன்படி திண்டுக்கல் மவாட்ட அளவிலான தோ்வு போட்டி ஜன. 4 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் 15 முதல் 29 வயதிற்குள்பட்ட இருபாலினரும் பங்கேற்கலாம்.

நாட்டுப்புற நடனம், நாட்டுபுறப் பாட்டு, ஓரங்க நாடகம் (ஆங்கிலம் அல்லது இந்தி), கா்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப் போட்டி, ஹாா்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதாா், கிடாா், தபேளா, மணிபுரி நடனம், பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக், ஒடிசி நடனம் என 18 பிரிவுகளில் தோ்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் தோ்வு செய்யப்படும் சிறந்த கலைஞா்கள், மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

அதன்பின்னா் மாநில அளவிலான போட்டிகளில் தோ்வு செய்யப்படுவோா், தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்காக பங்கேற்பாா்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா், அதற்கு தேவையான உபகரணங்கள், ‘சிடி பிளேயா்’ போன்றவற்றுடன் சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆஜராக வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு,திண்டுக்கல்-624004 என்ற முகவரியில் நேரிலோ, 0451-2461162 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT