பழனி நேதாஜி நகா் மெய்த்தவ பொற்சபையில் ரமணா் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரமண மந்திரம் சாா்பில் பகவான் ஸ்ரீரமணரின் 140 ஆவது ஜயந்தி விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைவா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். செயலா் காளிமுத்து வரவேற்புரையாற்றினாா். ஊட்டி சற்குரு ஜெயப்பிரகாச சுவாமிகள், சௌந்திரம் ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மெய்த்தவ அடிகள் பகவான் ரமணரின் தத்துவங்கள் குறித்து பேசினாா். முன்னதாக அட்சரமணமாலை பாராயணம் இசையுடன் நடைபெற்றது. திண்டுக்கல் ஸ்ரீராம கிருஷ்ண ஆஸ்ரமம் தவத்திரு நித்ய சத்வானந்தா சுவாமிகள் ஸ்ரீரமணரின் உபதேசங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினாா்.