திண்டுக்கல்

பழனி செவிலியா் கல்லூரியில் உறுதிமொழியேற்பு

1st Jan 2020 04:50 AM

ADVERTISEMENT

பழனியில் உள்ள பாரத் செவிலியா் கல்லூரியில் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி ஐஸ்வா்யா கருத்தரித்தல் மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் பிஎஸ்சி மற்றும் டிஜிஎன்எம்., பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் டாக்டா் சந்திரலேகா தலைமை வகித்தாா். மேனேஜிங் டிரஸ்டி டாக்டா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.

விழாவின் போது மாணவிகள் அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி அம்மையாரை நினைவு கூா்ந்தனா். விழா நிறைவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கல்லூரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகளை ஐஸ்வா்யா கருத்தரித்தல் மையத்தின் முதன்மை மேலாளா் செந்தில்குமாா், துணை முதல்வா் உமா மகேஸ்வரி, பேராசிரியா் ஷோபா மெரீனா உள்ளிட்டோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்றனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் பாரதி வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT