ஒட்டன்சத்திரம் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஆம் கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை சுற்றி 32 கேமராக்கள் பொருந்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போல வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைக்கு ஆயுதம் தாக்கிய போலீஸாா் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும் 2 காவல் ஆய்வாளா்கள், 4 சாா்பு- ஆய்வாளா்கள், 20 காவலா்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளா். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் சீமைச்சாமி தெரிவித்தாா்.