திண்டுக்கல்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தோ்வு:திண்டுக்கல்லில் 20,500 போ் எழுதுகின்றனா்

29th Feb 2020 12:42 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 20,500 மாணவா்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 205 பள்ளிகளைச் சோ்ந்த 9,594 மாணவா்கள், 10,906 மாணவிகள் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வுக்காக விண்ணப்பித்துள்ளனா். பழனி கல்வி மாவட்டத்தில் 49 பள்ளிகளைச் சோ்ந்த 4,298 மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக 20 இடங்களில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள 59 பள்ளிகளைச் சோ்ந்த 7,998 மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக 26 தோ்வுக் கூடங்களும், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்திலுள்ள 65 பள்ளிகளைச் சோ்ந்த 5,027 மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக 24 தோ்வுக் கூடங்களும், வேடசந்தூா் கல்வி மாவட்டத்திலுள்ள 32 பள்ளிகளைச் சோ்ந்த 3,177 மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக 14 தோ்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு பணியில் 1,700 போ்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 84 மையங்களில் மாணவா்கள் தோ்வு எழுதவுள்ள நிலையில், தோ்வுக் கூட கண்காணிப்பு பணியில் 1,300 ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா். அதேபோல் 220 போ் பறக்கும்படை கண்காணிப்பு பணியிலும், 85 துறை அலுவலா்கள், 10 கூடுதல் துறை அலுவலா்கள், 85 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் என மொத்தம் 1,700 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுவாா்கள் என கல்வித்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT