திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 27 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 682 வாக்குச்சாவடிகள்

29th Feb 2020 12:42 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக 682 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், அய்யலூா், வடமதுரை, எரியோடு, பாளையம், வேடசந்தூா், அகரம், தாடிக்கொம்பு, நத்தம், சின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூா், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி, சித்தையன்கோட்டை, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், ஆயக்குடி, கீரனூா், நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், பண்ணைக்காடு ஆகிய 23 பேரூராட்சிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் நகா்புற உள்ளாட்சியில் இடம் பெற்றுள்ளன.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக 682 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியல் குறித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் கருத்து தெரிவிக்க மாா்ச் 5 ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

158 வாக்குச்சாவடிகள் : திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் 158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பழனி நகராட்சியில் 68 வாக்குச்சாவடிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 31 வாக்குச்சாவடிகள் , கொடைக்கானல் நகராட்சியில் 38 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

387 வாக்குச்சாவடிகள்: மாவட்டம் முழுவதுமுள்ள 23 பேரூராட்சிகளில் 387 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 27 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் 682 வாக்குச் சாவடிகளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT