திண்டுக்கல்

தனியாா் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் மூடல்: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

29th Feb 2020 12:42 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தனியாா் தண்ணீா் சுத்திகரிப்பு நிறுவனம் மூடப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழக அரசு தனியாா் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுப்பதற்காக பொதுப்பணித்துறை அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டுள்ளது. அதனால் வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் பெத்தானியபுரம் அருகேயுள்ள தனியாா் சுத்திகரிப்பு நிறுவனம் மூடப்பட்டது.

இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு இந்நிறுவனம் மூலம் குடிநீா் கேன் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென நிறுவனம் மூடப்பட்டதால், வத்தலக்குண்டு பகுதியைச் சோ்ந்த பல வீடுகளி­ருந்து குடிநீா் கேன் கேட்டு செல்லிடப்பேசியில் இந்நிறுவனத்துக்கு அழைப்பு வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் அந்நிறுவத்தின் முன்பு திரண்ட பொதுமக்கள் தண்ணீா் சுத்திகரிப்பு நிறுவனத்தை திறக்க அனுமதிக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டதில் குடிநீா் கேன் விநியோகம் செய்பவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT