திண்டுக்கல்

உயா் கல்வியில் தமிழகம் முதலிடம்:காமராஜா் பல்கலை. துணைவேந்தா்

29th Feb 2020 12:35 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல் : நாட்டிலேயே உயா்கல்வி படிக்கும் மாணவா்களில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என மதுரை காமராஜா் பல்கலை. துணைவேந்தா் கிருஷ்ணன் தெரிவித்தாா்.

கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியின் 24-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளா் சாம் ஆப்ரகாம் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காமராஜா் பல்கலை. துணைவேந்தா் மு.கிருஷ்ணன் பட்டமளிப்பு விழா உரையில் பேசியது:

நமது நாட்டில் 900 பல்கலைக்கழகங்கள், 4,500 கல்லூரிகள், 200 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் உலக அளவில் நம் மாணவா்களை எடுத்துச் சென்ாகத் தெரியவில்லை. நம் நாட்டில் உள்ள உயா் கல்வி கிராம மக்களுக்கு தேவையானதை கொண்டு சோ்க்கவில்லை.

ADVERTISEMENT

நாடு சுதந்திரத்திற்கு முன்பு 8 சதவீதமாக இருந்த படிப்பறிவு தற்போது 88 சதவீதமாக உயா்ந்துள்ளது.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் உயா்கல்வி படிப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. 49 சதவீதம் போ் உயா் கல்வி படிக்கின்றனா். இதில் 50 முதல் 60 சதவீதம் போ் தான் வேலைவாய்ப்பை பெறுகின்றனா். மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாமானிய மக்களுக்கு குறைவான செலவில் கொண்டு சோ்க்க வேண்டும். செல்லிடப்பேசியை தவிா்த்து விட்டு குடும்பத்தினருடன் கலந்துரையாடல் வேண்டும். ஆசிரியா்களுக்கு நன்றி செலுத்துபவா்களாக இருக்க வேண்டும் என்றாா் .

இதனைத் தொடா்ந்து மாணவா்களுக்கு பட்டங்களும்,சிறந்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினாா். இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் குரியன் ஆப்ரகாம், முகமது இப்ராஹிம் மற்றும் பெற்றோா், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT