பழனி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இம்மையத்தில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி மாா்ச் மாதம் வரை சிறப்பு மகளிா் மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை மகளிா் எலும்பின் வலு அறியும் பரிசோதனை, உடல் கொழுப்பின் அளவினை அறியும் பரிசோதனை ஆகியவை நடத்தப்பட்டது. மையத்தின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் செந்தாமரைச் செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில் 200க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா்.
மாா்ச் மாதம் 1, 8, 15, 22 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முறையே மகளிா் நலம், மகப்பேறு சிகிச்சை, மாதவிடாய் பிரச்னைகள், மெனோபாஸ் மற்றும் மகளிருக்கான லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முகாம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதால் பெண்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.