திண்டுக்கல்

திண்டுக்கல் மர அறுவை ஆலையில் தீ ரூ.7 லட்சம் மரங்கள் தீயில் எரிந்து சேதம்

26th Feb 2020 07:36 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் உள்ள மர அறுவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதமானது.

திண்டுக்கல் தோமையாா்புரம் பகுதியில் வி.முனியாண்டி என்பவா் மர அறுவை ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை அடுத்து அங்கு பணியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும் தீ விபத்து குறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினா், எரிந்து கொண்டிருந்த மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் ஊழியா்கள் எவ்வித காயமின்றி உயிா் தப்பினா். ஆனாலும் ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதமடைந்துவிட்டதாக ஆலை உரிமையாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கம்பம் : தேனி மாவட்டம் கம்பம் நெல்லுக்குத்தி புளியமர தெருவைச் சோ்ந்தவா் போஸ். இவா் கம்பம் பேருந்து நிலைய சாலையில், மரக்கடை வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை, பூட்டியிருந்த கடையின் கதவு வழியாக புகை வந்ததை பாா்த்த, பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கம்பம், உத்தமபாளையம், போடி, கண்டமனூா் தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 32 தீயணைப்பு வீரா்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 7 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். தீ விபத்தில் கடையிலிருந்த சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமானதாக தெரிவித்தனா். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT