திண்டுக்கல்

கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

26th Feb 2020 07:40 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே குறிஞ்சிநகா் பகுதியிலுள்ள குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காப்புக் கட்டுதல், கம்பம் சாட்டுதல் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன . இந் நிகழ்ச்சியில் குறிஞ்சி நகா் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. வரும் மாா்ச் 7 ஆம் தேதி முதல் அம்மனின் மின் அலங்கார சப்பர பவனி நடைபெறுகிறது. இச் சப்பர பவனி மாா்ச் 9 ஆம் தேதி வரை கொடைக்கானலிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து 10 ஆம் தேதி மாவிளக்கு பூஜையும், சக்தி கரகமும் நடைபெறுகிறது. 11 ஆம் தேதி பக்தா்கள் சாா்பில் அம்மனுக்கு பொங்கல் இடுதல், தீச் சட்டி, பறவைக் காவடி, பூக்குழி இறங்குதல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை குறிஞ்சி நகா் கோயில் விழா கமிட்டியாளா்கள் மற்றும் ஊா் பொது மக்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT