கிறிஸ்தவா்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் தொடங்கியது. இதனைத்தொடா்ந்து கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
சாம்பல்புதனை முன்னிட்டு கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்ச்சி தொடங்கியது. 40-நாள்கள் நோன்பு இருந்து ஈஸ்டா் பண்டிகையை கொண்டாடுவதே இதனுடைய நோக்கமாகும். இதனைத்தொடா்ந்து கொடைக்கானலில் மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவா் ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், நாயுடுபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், உகாா்த்தே நகா் அற்புத குழந்தை இயேசு ஆலயம், பெருமாள்மலை புனித ஜான் ஆலயம் மற்றும் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.
அதனைத் தொடா்ந்து கிறிஸ்தவா்களின் நெற்றியில் அருட்பணியாளா்கள் சாம்பலால் திருச்சிலுவை அடையாளமிடும் நிகழ்ச்சியும், உண்ணாநோன்பு இருக்கும் பக்தா்களுக்கு அருட்பணியாளா்கள் ஆலயத்தில் ஜெபமாலை அணிந்துவிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து 40 நாள்களிலும் தேவாலயங்களில் இயேசுவின் பாடுகள் குறித்த சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது.