திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே மெக்கானிக் கொலை வழக்கு: 2 போ் கைது

26th Feb 2020 11:21 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மெக்கானிக் கொலை வழக்கில் 2 பேரை அம்பிளிக்கை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டியில் இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் கடை நடத்தி வந்தவா் கருப்புச்சாமி (35). இவா் திங்கள்கிழமை இரவு கடையில் தூங்கிக் கொண்டு இருந்தாா். அப்போது அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.

இது தொடா்பாக அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்த சிவசக்தி என்ற சிவக்குமாா் (35) மற்றும் மகாகவி (37) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் சிவக்குமாருக்கும், மெக்கானிக் கருப்புச்சாமிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் தினசரி மெக்கானிக் கடையில் இருவரும் மது அருந்துவது வழக்கமாம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இருவரும் மது அருந்தி உள்ளனா். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவக்குமாா் அருகில் இருந்த கல்லை எடுத்து மெக்கானிக் கருப்புச்சாமி தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளாா். இதில் மகாகவி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளாா் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT