திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய வணிக வளாக கடைகளுக்கான ஏலம் முறைகேடாக நடத்தியுள்ளதாகக்கூறி, மாவட்ட கலெக்டரிடம் புகாா் செய்யப்பட்டுள்ளது.
ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வணிகவளாக கட்டடத்தில் மொத்தம் 20 கடைகள் உள்ளன. இந்த கடைகள், 2016-இல், ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டன. கடந்த வாரம் இந்த கடைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டது.
போதிய அறிவிப்பு இல்லாமல் நடந்ததாக, ஏற்கெனவே ஏலம் எடுத்த கடை உரிமையாளா்கள் புகாா் கூறினா்.
இந்நிலையில், கடை எண் 10-ல் ஏலம் எடுத்திருந்த புதுக்கோடாங்கிபட்டி பால்சாமி மனைவி ஜெயக்குமாரி சாா்பில், மனு நீதி நாளில், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. அதில், 2016 மாா்ச் 1 முதல் அரிசி கடை, வாழை இலை வியாபாரம் செய்து வருகிறேன். இதற்காக ரூ. 4 லட்சம் வங்கிக்கடன் பெற்றுள்ளேன். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சீதாராமன், மேலாளா் மகுடபதி சோ்ந்து முறைகேடாக ஏலம் நடத்தியுள்ளனா். முறைகேட்டில் டுபட்டவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.