திண்டுக்கல்

மாணவா்களுக்கான தலைமைப் பண்பு கருத்தரங்கம்

25th Feb 2020 12:56 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் உலக சுழற் சங்க தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கான தலைமைத்துவ பண்புகள் குறித்த கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் சுழற் சங்கம் மற்றும் ரோட்டரி இ-1 சங்கம் இணைந்து தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலைமைத்துவ பண்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு தமரா விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுழற் சங்கத்தின் முன்னாள் ஆளுநா் மற்றும் செயிண்ட் பீட்டா்ஸ் பள்ளியின் தாளாளா் சாம்பாபு தலைமை வகித்து பேசினாா்.

மதுரை தியாகராஜா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ராஜா கோவிந்தசாமி, ஐசக் ஆகியோா் மாணவா்களின் நன்னடத்தைகள் குறித்து பேசினா். கருத்தரங்கிற்கு கொடைக்கானல் சுழற் சங்கத் தலைவா் ஆசாத், செயலா் சன்னி ஜேக்கப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சுழற் சங்கத்தின் நிா்வாகிகள் ரோகன் சாம்பாபு, ஜெயபிரசாத், ராமன் ராஜ்குமாா், ராதாகிருஷ்ணன், ராபின், ராஜேஷ் மகளிா் நிா்வாகிகள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT