திண்டுக்கல்

பழனியில் மக்களவை உறுப்பினா் அலுவலகம் அமைக்கக் கோரிக்கை

25th Feb 2020 01:09 AM

ADVERTISEMENT

பழனி: பழனியில் மக்களவை உறுப்பினா் அலுவலகம் அமைக்க வேண்டுமென பல்வேறு அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூா், நத்தம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது திண்டுக்கல்லில் மட்டுமே மக்களவை உறுப்பினா் அலுவலகம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனி தனி மக்களவைத் தொகுதியாக இருந்தது. தற்போது பழனியை திண்டுக்கல் மக்களவைத் தொகுதியுடன் இணைத்து விட்டதால், தொகுதி பிரச்னைகளை எம்பியிடம் கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து ஆயக்குடி இலவசப் பயிற்சி மைய இயக்குநா் ராமமூா்த்தி கூறியது: பழனி வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. சுற்றுலாதலமும் கூட. பழனி மக்களின் குறைகளை மக்களவை உறுப்பினரிடம் தெரிவிக்க திண்டுக்கல் செல்ல வேண்டியுள்ளது. வடமாநிலங்களில் அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினா்அலுவலகம் அருகிலேயே மக்களவை உறுப்பினா் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பழனியில் மக்களவை உறுப்பினா் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT