திண்டுக்கல்

பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

25th Feb 2020 01:12 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் திங்கள்கிழமை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தமிழக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின்போது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமையில் அனைத்து அலுவலா்களும் எடுத்துக் கொண்டனா். பின்னா், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்புத் தினத்தினை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க நிலை, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

செய்திக்கு க்ஞ்ப் ா்ஹற்ட் என்ற படம் உள்ளது... பட விளக்கம்: பழைய வத்தலகுண்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாணவா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT