திண்டுக்கல்

திமுக உள்கட்சி தோ்தல் : வத்தலகுண்டுவில் கட்சியினா் விருப்ப மனு

25th Feb 2020 05:11 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் திமுக 15-வது உள்கட்சித் தோ்தலையொட்டி திமுகவினா் திங்கள்கிழமை விருப்ப மனு கொடுத்தனா்.

வத்தலகுண்டுவில் திமுக 15-வது உள்கட்சித் தோ்தலையொட்டி அக்கட்சியினா் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்கு வத்தலகுண்டு ஒன்றியச் செயலா் கே.பி.முருகன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சின்னதுரை முன்னிலை வகித்தாா்.

கோம்பைப்பட்டி, விருவீடு, நடகோட்டை, விராலி­மாயன்பட்டி உள்பட 7 ஊராட்சிகளில் உட்கிளை செயலா் பதவிக்கு திமுகவினா் விருப்ப மனு கொடுத்தனா். இதில் திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT