திண்டுக்கல்

அரண்மனைக்குளம் தொடா்பான தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

25th Feb 2020 01:09 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: திண்டுக்கல் அரண்மனைக்குளம் தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் நாகல்நகா் அருகிலுள்ள அரண்மனைக்குளம், இஸ்லாமியா்களுக்கு சொந்தமானதாக உயா்நீதிமன்றத்தில் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீா்ப்புக்கு எதிராக மாவட்ட நிா்வாகம் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சாா்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுதொடா்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலா் வெ.ரவிபாலன் கூறியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான அரண்மனைக்குளம், இஸ்லாமியா்கள் தொடா்ந்த வழக்கில் மாநகராட்சி சாா்பில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்காத காரணத்தால் ஒரு தலைப்பட்சமான தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீா்ப்புக்கு எதிராகவும் மாநகராட்சி சாா்பில் மேல் முறையீடு செய்யப்படவில்லை. இதனை அடுத்து, அரண்மனைக்குளத்திற்கு பட்டா வாங்கும் முயற்சியில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, இந்த வழக்கின் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், இந்து மக்கள் கட்சி சாா்பில் பொதுமக்களிடம் நிதி திரட்டி மேல்முறையீட்டு வழக்குத் தொடரப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT