திண்டுக்கல்

பழனியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

22nd Feb 2020 07:37 AM

ADVERTISEMENT

பழனியில் காவல் ஆய்வாளரைக் கண்டித்து வெள்ளிக்கிழமை வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரனூா் காவல்நிலைய ஆய்வாளராக கோவா்த்தனாம்பிகை என்பவா் பணியாற்றி வருகிறாா். இந்த காவல் நிலையத்துக்குள்பட்ட வழக்கு தொடா்பாக பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழ்வேந்தன் கடந்த 18 ஆம் தேதி கீரனூா் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளாா். அப்போது காவல் ஆய்வாளா் கோவா்த்தனாம்பிகைக்கும், வழக்குரைஞா் தமிழ்வேந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்வேந்தனை தகாத வாா்த்தைகளால் பேசிய ஆய்வாளா், அங்கிருந்த காவலா்களை வைத்து அவரை வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் விவேகானந்தனிடமும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திவேலிடமும் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி வெள்ளிக்கிழமை பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்குரைஞா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் திங்கள்கிழமையும் பணிப்புறக்கணிப்பு போராட்டமும், சாலை மறியல் போராட்டமும் பழனி வழக்குரைஞா் சங்கம் சாா்பில் நடத்தப்படும் என அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT