திண்டுக்கல்

தேசிய அறிவியல்வார தொடக்க விழா

22nd Feb 2020 07:38 AM

ADVERTISEMENT

காந்தி கிராம கிராயமிப் பல்கலை.யில் தேசிய அறிவியல் வார விழாவின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் அறிவியல் துறைகள் இணைந்து ஒரு வார காலம் பிப். 21 முதல் 28 ஆம் தேதி வரை தேசிய அறிவியல் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இதற்கான தொடக்க விழா பல்கலை. வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தா் (பொ) எம்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை. துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் போராசிரியா்கள் டேவிட் ரவீந்திரன், எம்.சிவராமன் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT