திண்டுக்கல்

மக்காச்சோளம் விலை குறைவால் ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கவலை

21st Feb 2020 08:06 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் பகுதியில் மக்காச்சோளம் மூட்டை ரூ. 1700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட ஒரு மூட்டைக்கு ரூ.500 குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள தேவத்தூா், பொருளூா், கள்ளிமந்தையம், ஒடைப்பட்டி, குத்திலுப்பை, சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, கேதையுறும்பு, காளாஞ்சிபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, மண்டவாடி, பெரியகோட்டை, காவேரியம்மாபட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். தற்போது அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகள் மக்காச்சோளத்தை அறுவடை செய்து வருகின்றனா். பயிா்கள் மூளைப்பு திறன், படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மக்காச்சோள விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. மேலும் கடந்த ஆண்டு ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ. 2300 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 1700-க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட ஒரு மூட்டை ரூ. 500- விலை குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT