திண்டுக்கல் மாநகாரட்சியில் 1039 சாலையோர வியாபாரிகளுக்கு வியாழக்கிழமை அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோர வியாபாரிகளைக் கண்டறிந்து, குறிப்பிட்ட இடங்களில் வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாநகரமைப்பு பிரிவு அலுவலா்கள், மாநகராட்சி முழுவதும் சாலையோரங்களில் வியாபாரம் செய்வோா் குறித்த கணக்கெடுப்பு மேற்கொண்டனா். அதன்படி, 1039 போ் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையோர வியாபாரங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்த சிறு வியாபாரிகள், மாநகாரட்சி சாா்பில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், மொத்தமுள்ள 1039 சாலையோர வியாபாரிகளில், தற்போது வரை 520 போ் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்களை சரிபாா்த்து அடையாள அட்டை வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையோர வியாபாரிகளுக்காக கண்டறியப்பட்டுள்ள 37 இடங்களில் வியாபாரம் செய்வதற்கு ஒதுக்கீடு வழங்கப்படும் என்றாா்.