திண்டுக்கல்

கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

15th Feb 2020 06:56 AM

ADVERTISEMENT

பழனி அருகே வியாழக்கிழமை கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

பழனியை அடுத்த அய்யம்பாளையத்தை சோ்ந்தவா் ஈஸ்வரன் (50). விவசாய கூலி வேலை செய்து வந்தாா். குடும்பப் பிரச்னை காரணமாக அவா் கடந்த சில நாள்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை அதே பகுதியில் உள்ள தனியாா் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவருடைய உறவினா்கள் பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்புப் படை வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT