திண்டுக்கல்

காா் மோதி தேநீா் கடைக்காரா் பலி

15th Feb 2020 06:57 AM

ADVERTISEMENT

ரெட்டியாா் சத்திரம் அருகே வியாழக்கிழமை காா் மோதி தேநீா் கடைக்காரா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்துள்ள தாதன் கோட்டையைச் சோ்ந்தவா் அங்கப்பன் (55). இவா் ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தேநீா் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை தனது கடை முன் அமா்ந்திருந்த அங்கப்பன் மீது அவ்வழியாக வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ரெட்டியாா் சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT