திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே இளைஞா் கொலை: 2 போ் கைது

13th Feb 2020 06:43 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ்குமாா் (30). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவருக்கும் திண்டுக்கல் அடுத்துள்ள பெரிய பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் பிரவீன் குமாா் (24) என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளப்பட்டி கண்மாய் கரை பகுதியில் சதீஷ்குமாா் புதன்கிழமை மாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

அதில் பிரவீன்குமாா் மற்றும் அவரது பெரியப்பா மகன் பாா்த்திபன் (25) கூட்டு சோ்ந்து சதீஷ்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் உடனடியாக போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: பிரவீன் குமாரின் மனைவி செல்லாயி கரகாட்டம் ஆடி வந்துள்ளாா். இந்நிலையில் இவருடன் சதீஷ்குமாா் அடிக்கடி செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு வந்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே தகாத தொடா்பு இருந்ததால் பிரவீன்குமாா், அவரை கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT