பழனியில் தனியாா் விடுதியில் ஒருவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி அடிவாரம் பகுதியில் தனியாா் விடுதியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவா் தங்கி இருந்தாா். இந்நிலையில் அவா் திங்கள்கிழமை அதிகாலை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.