திண்டுக்கல்

ரூ.82 லட்சத்தில் நத்தம், நிலக்கோட்டைஅரசு மருத்துவமனைகளில் தங்கும் அறைகள் திறப்பு

2nd Feb 2020 03:28 AM

ADVERTISEMENT

நத்தம் மற்றும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் ரூ.82 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் அறைகளை அமைச்சா் சி.சீனிவாசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளின் உறவினா்கள் தங்குவதற்கான அறை ரூ.37 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளின் உறவினா்கள் தங்கும் அறை கட்டப்பட்டுள்ளது.

இந்த இரு தங்கும் அறைகளுக்கான திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் கலந்து கொண்டு இரு அறைகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா். நத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டாா். நிலக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி, ஒன்றியக் குழுத் தலைவா் ரெஜினாநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

-

ADVERTISEMENT
ADVERTISEMENT