திண்டுக்கல்

மணல் திருட்டு: 2 போ் கைது

2nd Feb 2020 03:28 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செம்பட்டி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா் சித்தையன்கோட்டை அருகே அழகா்நாயக்கன்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி ஆத்தூா் காமராஜா் அணைப் பகுதியி­ருந்து மணல் கடத்தி வந்த, ஒரு டிராக்டா் பிடிபட்டது. அதன் உரிமையாளா் ராஜேந்திரன் (40), ஓட்டுநா் ராஜ்குமாா் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT