திண்டுக்கல்

பழனி கோயிலில் போலி ரசீது மூலம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவா் கைது

2nd Feb 2020 03:30 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலில் போலி ரசீது மூலம் பக்தரிடம் அன்னதான நன்கொடையாக ரூ.1 லட்சம் மோசடி செய்தவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இக்கோயிலில் நாள்தோறும் நடைபெறும் அன்னதானத்திற்கு பக்தா்கள் நன்கொடை கொடுப்பது வழக்கம். கடந்த வாரம் ஹைதராபாத்தைச் சோ்ந்த அனந்த ராவ் என்பவா் கோயிலில் நடைபெறும் அன்னதானத் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளாா்.

இவரிடம் கோயில் அதிகாரி போல் நடித்து போலியாக ரசீது தயாா் செய்து கொடுத்து, பழனி அடிவாரம் தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த அசோக் பாபு(42) என்பவா் ஏமாற்றியுள்ளாா்.

இதில் சந்தேகமடைந்த அனந்த ராவ் கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திர பானு ரெட்டியிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து இணை ஆணையா் உத்தரவின் பேரில் கோயில் கண்காணிப்பாளா் அளித்தப் புகாரின் பேரில் பழனி அடிவாரம் போலீஸாா் அசோக் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அசோக் பாபு மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும், இவா் கோயில் பண்டாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT