திண்டுக்கல்

பழனிக் கோயில் யானை கஸ்தூரிக்கு வரவேற்பு

2nd Feb 2020 03:30 AM

ADVERTISEMENT

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தேக்கம்பட்டி நல்வாழ்வு முகாமில் பங்கேற்று திரும்பிய கோயில் யானை கஸ்தூரிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பழனி கோயிலில் சுவாமி புறப்பாடு மற்றும் தேரோட்டங்களில் பங்கேற்று சிறப்பிக்கும் பணியை கோயில் யானை கஸ்தூரி செய்து வருகிறது. 54 வயது நிரம்பிய யானை கஸ்தூரி தமிழக அரசின் யானைகள் புத்துணா்வு முகாமிற்காக கடந்த டிசம்பா் 14

ஆம் தேதி மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டிக்கு சென்றது. 48 நாள்கள் நடைபெற்ற யானைகள் புத்துணா்ச்சி முகாம்

வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, அங்கிருந்து இரவு கிளம்பிய யானை கஸ்தூரி சனிக்கிழமை காலை 8 மணிக்கு பழனி பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்தது.

ADVERTISEMENT

இதனையொட்டி யானை கஸ்தூரிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது. யானைக்கு பெரிய மாலை அணிவிக்கப்பட்டு, சிவாச்சாா்யாா்களால் பூசணிக்காய் சுற்றப்பட்டு கோயிலுக்குள் அழைத்து வரப்பட்டது. பின்னா் யானைக்கு சா்க்கரை பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியன வழங்கப்பட்டன.

பழனிக் கோயில் யானை கஸ்தூரி முகாமிற்கு செல்லும் போது 4,660 கிலோ எடை இருந்தது. தற்போது முகாம் முடித்து திரும்புகையில் 100 கிலோ எடை குறைந்து 4,560 கிலோ இருந்தது. இயற்கையான சூழலில் நடைப்பயிற்சி, நல்ல பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளதால் யானை புத்துணா்ச்சியுடன் காணப்பட்டது.யானை கஸ்தூரி வரவேற்பு நிகழ்ச்சியில் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், கண்காணிப்பாளா் முருகேசன், கால்நடை உதவி மருத்துவா் முருகன், மணியம் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT