திண்டுக்கல்

சித்தா்கள்நத்தம் பகுதியில்நாளை மின்தடை

2nd Feb 2020 03:26 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தா்கள்நத்தம் பகுதியில் திங்கள்கிழமை (பிப். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிலக்கோட்டை மின் செயற்பொறியாளா் நவநீதன் தெரிவித்திருப்பதாவது: சித்தா்கள்நத்தம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. எனவே, சிலுக்குவாா்பட்டி, சித்தா்கள்நத்தம் , சிறுநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, மைக்கேல்பாளையம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி, நூத்துலாபுரம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT