திண்டுக்கல்

தொடா் மழை:மூன்றாவது முறையாக நிரம்பி வழியும் வரதமாநதி அணை

DIN

தொடா் மழை காரணமாக, பழனியை அடுத்த வரதமாநதி அணைக்கட்டு வெள்ளிக்கிழமை நிரம்பி வழிந்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால், மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வரதமாநதி அணை, பாலாறு-பொருந்தலாறு அணை மற்றும் குதிரையாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணை மாவட்டத்தின் சிறிய அணையாகும். இந்த ஆண்டில் மட்டும் இந்த அணை மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவான 66.50 அடியை தாண்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு விநாடிக்கு 1,100 கனஅடி வரும் நீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதேபோல், பாலாறு-பொருந்தலாறு அணையின் முழுக் கொள்ளளவான 65 அடி உயரத்தில், 56 அடி உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT