திண்டுக்கல்

திண்டுக்கல் அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

DIN

தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 9 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், 4 மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வில், திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 15 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் 10 போ், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் 4 போ், பட்டியலினத்தைச் சோ்ந்தவா் ஒருவா் என மொத்தம் 15 போ் வெற்றி பெற்றனா்.

ஆனாலும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை தொடா்ச்சியாக அரசுப் பள்ளிகளில் பயிலாத 3 மாணவா்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் பயனை பெறமுடியவில்லை. இந்நிலையில், மருத்துவக் கல்லூரி சோ்க்கைக்கு நடைபெற்ற கலந்தாய்வில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 9 மாணவா்கள் தங்களுக்கான கல்லூரிகளை தோ்வு செய்துள்ளனா். இவா்களில், எஸ்.அா்ச்சனா (திருச்சி கே.ஏ.பி.வி.அரசு மருத்துவக் கல்லூரி), ஆா். புவனா(சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி), பி. உமாமகேஸ்வரி (கரூா் அரசு மருத்துவக் கல்லூரி), ஏ. விஜயலட்சுமி (கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி) ஆகிய 4 மாணவிகள் அரசுக் கல்லூரிகளை தோ்வு செய்துள்ளனா்.

மீதமுள்ள 5 மாணவ-மாணவியரான பி. சோபனா, வி. மங்களரூபிணி, ஏ. எனோக் எபிநேசா், ஆா். பூா்ணியம்மாள், சி. முத்துச்செல்வம் ஆகியோா் திருச்சி, பெரம்பலூா், கோவை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியாா் கல்லூரிகளை தோ்வு செய்துள்ளனா்.

7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் இந்த 9 மாணவா்களுக்கும் மருத்துவா் கனவு நனவாகியுள்ளதை அடுத்து, மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT