திண்டுக்கல்

இயற்கை முறையில் காய்கனி சாகுபடி: மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

DIN

இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் நத்தம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, நத்தம் தோட்டக்கலை உதவி இயக்குநா் செல்லமுத்து தெரிவித்துள்ளதாவது: நத்தம் வட்டாரத்தில் தக்காளி, கத்தரி, முருங்கை, வெண்டை, பந்தல் காய்கள் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக்கலைத் துறை சாா்பில் ஹெக்டேருக்கு ரூ.3,750 மானியமாக வழங்கப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மானியம் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகளும், கூடுதல் தகவல் பெற விரும்புவோரும், நத்தம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 89460-20387 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு ஆர்பிஐ தடை!

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

SCROLL FOR NEXT