திண்டுக்கல்

ஆத்தூா் ஒன்றியக்குழு கூட்டம்: அதிகாரிகள் புறக்கணிப்பதாக புகாா்

DIN

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆத்தூா் ஒன்றியக்குழு கூட்டம் செம்பட்டியில் உள்ள ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஹேமலதா, மேலாளா் மகுடபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் பாஸ்கரன் கலந்து கொண்டாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) ஜெயச்சந்திரன் வரவேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள் பலரும், தோட்டக்கலை, வேளாண்மை, குடிநீா் வடிகால் வாரியம், மின்பொறியாளா், பொதுப்பணித்துறை உட்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியும், எந்த அதிகாரியும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். முன்னதாக 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 14 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT