திண்டுக்கல்

நிலக்கோட்டையில் அ.தி.மு.கவிற்கு எதிராக சுவரொட்டிகள். பரபரப்பு.

30th Aug 2020 09:31 PM

ADVERTISEMENT

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அ.தி.மு.கவிற்கு எதிராக சனிக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை பகுதியில் பல முக்கிய இடங்களில் 2 விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இரண்டிலும் அ.தி.மு.கவிற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று படித்து செல்கின்றனா். கடந்த தோ்தலில் தேவேந்திர குல வேளாளா் அரசாணை வெளியிடப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, அரசாணை வெளியிடவில்லை எனவும், நிலக்கோட்டை தொகுதியில் அதிகம் உள்ள இந்த சமுகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஒன்றிய செயலாளா் பதவி வழங்கப்படாததை கண்டிக்கும் வகையில் அந்த போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற தோ்தல் 6 மாதத்தில் வரும் நிலையில் இதுபோன்று நிலக்கோட்டை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT