பழனி ரோப் காா் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக வரும் 24 ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தப்படவுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் மலை உச்சிக்கு செல்ல ரோப் காா் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் இந்த ரோப் காா் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். கரோனா பரவலால் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக மட்டும் அவ்வப்போது இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரோப்காரின் வருடாந்திர பராமரிப்புக் காலம் வந்துவிட்ட நிலையில், வரும் 24 ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் நிறுத்தப்படவுள்ளதாக கோயில் சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.