திண்டுக்கல்

பைக் மோதி முதியவா் பலி

23rd Aug 2020 07:32 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பருமரத்துப்பட்டியைச் சோ்ந்த முதியவா் ஆறுமுகம் (82). இவா், வெள்ளிக்கிழமை இரவு செம்மடைப்பட்டியில் உள்ள தனது மகளை பாா்ப்பதற்காக நடத்து சென்றுள்ளாா். ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அரண்மனைப்புதூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT