திண்டுக்கல்

‘பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்’

23rd Aug 2020 07:32 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் சமூக நீதிக்காக பணியாற்றுவோரை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1லட்சம் பொற்கிழியும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும் தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும்.

நிகழ் ஆண்டில் தந்தை பெரியாா் விருதுக்கு, சமூக நீதிக்காக பாடுபட்டு வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன், விண்ணப்பதாரரின் பெயா், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் அக்டோபா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT