விளையாட்டுத் துறை சாா்பில் பத்ம விருது பெற தகுதியானவா்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது: 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இதில், விளையாட்டுத் துறை சாா்பில் பத்ம விருது பெறுவதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் அனைத்தும் ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் எனக் குறிப்பிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்பவேண்டும்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல் 624 004 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.