திண்டுக்கல்

கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் வருகை அதிகரிப்பு

20th Aug 2020 08:27 AM

ADVERTISEMENT

இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் வருகை அதிகரித்துள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ- பாஸ் எளிதாக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மட்டும் காலை முதல் மாலை 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்துள்ளதாக நகராட்சி சோதனைச் சாவடி அலுவலா்கள் தெரிவித்தனா். கடந்த 2 நாள்களாக கொடைக்கானலில் வாகனங்களின் போக்குவரத்தும் பொது மக்களின் நடமாட்டமும் சற்று கூடுதலாக இருந்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கரோனா பரிசோதனை:கொடைக்கானல் நகா் பகுதி மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளான மன்னவனூா், தடியன்குடிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினா் கரோனா பரிசோதனை செய்து வருகின்றனா். கடந்த இரண்டு நாள்களாக 390-பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மருத்துவக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT