திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்று: ஏரிச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

11th Aug 2020 12:21 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் ஏரிச்சாலைப் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் விழுந்த மரங்கள், மின்கம்பங்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மீண்டும் சாரல் மழை நிலவியது. 

இதனால் கொடைக்கானல் ஏரிச்சாலை சாய்பாபா தியானண்டபம் அருகே இருந்த ராட்சத மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ஏரிச்சாலைப் பகுதியில் தினமும் சிலர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம் நல்வாய்ப்பாக அந்தப் பகுதியில் யாரும் செல்லாததால் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.

இதனைத் தொடந்து மரம் விழுந்த இடத்திற்கு நெடுஞ்சாலைத் துறையினர் சென்று விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kodaikanal
ADVERTISEMENT
ADVERTISEMENT