திண்டுக்கல்

ராமா் கோயில் பணிக்காக பழனியிலிருந்து சண்முகாநதி தீா்த்தம் அனுப்பி வைப்பு

6th Aug 2020 07:55 AM

ADVERTISEMENT

பழனி சண்முகா நதியிலிருந்து புனித நீா் சேகரிக்கப்பட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமான பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்காக புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதியில் இருந்தும் புனித நீா், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனியில் உள்ள சண்முகா நதியிலிருந்து விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் கலசங்களில் புனிதநீா் எடுத்து வரப்பட்டது. பின்னா் அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன்பாக அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு பிராமணா் சங்க மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து, போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், பாஜக மாநில விவசாய அணி நிா்வாகி வழக்குரைஞா் திருமலைசாமி, மாவட்டத் தலைவா் கனகராஜ், விஹெச்பி மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல் பழனி திருஆவினன்குடி கோயில் முன்பாக இந்து முன்னணி சாா்பில் மாவட்டத் தலைவா் ஜெகன் தலைமையில் ராமா்கோயில் குறித்து விளக்கவுரையாற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT